இந்தியாவில் விதவைகளின் பரிதாபகரமான நிலைமை!

தமிழில் கட்டுரை எழுத வேண்டும் என்று எனக்கு ஆசை அதன் ஆரம்பமாக எனக்கு மிகவும் பிடித்த பாரதியாரின் காட்டுரையை முதலில் எழுதுகிறேன்.

ஸ்ரீமான் மொஹன்தாஸ் கரம்சந்த் காந்தி( மாகாத்மா காந்தி)யால் நடத்தப்படும் "நவஜீவன்" என்ற பத்திரிக்கையில் ஒருவர் பாரத தேசத்து விதவைகளைப் பற்றிய சில கணக்குகளைப் பிரசுரம் செய்திருக்கிரார்.
அவற்றுள் குழந்தை, கைம்பெண்களைப் பற்றிய பின்வரும் கணக்கு மிகவும் குறிப்பிடத்தக்கது.

வயது----------மணம்புரிந்த மாதர்-------கைம்பெண்கள்
0-1-------------13212--------------------1014
1-2-------------17753--------------------856
2-3-------------49787--------------------1807
3-4-------------134105-------------------9273
4-5-------------302425-------------------17703
5-10------------2219778------------------94240
10-15-----------10087024------------------223320
இந்த கணக்கின்படி இந்தியாவில் பிறந்து ஒரு வருஷமாகும் முன்னரே விதவைகளாய்விட்ட மாதர்களின் தொகை 1,014. மற்றும்15 வயதுக்குக் குறைந்த கைம்பெண்களின் தொகை 3.5 லட்சம்.இவர்களில் சற்றுக்குறைய 18000 பேர் 5 வயதுக்குட்பட்டோர்:
இப்படிபட்ட கணக்குகள் சில கொடுத்துவிட்டு அவற்றின் இறுதியில் மேற்படிக் கடிதம் எழுதியவர்."இக் கைம்பெண்களின் மொத்தத் தொகை மிகவும் அதிகமாக இருக்கிறது.இதைப் படிக்கும் போது எந்த மனிதனுடைய மனமும் இளகிவிடும்(இந்நாட்டில்) விதவைகள் என்ற பாகுபாட்டை நீக்க முயல்வோர் யாருளர்?"என்று சொல்லி வருத்தப்படுகிறார்.
இந்த வியாக்கியானம் மீது மகாத்மா காந்தி பாத்திராதிபர் என்ற முறையில் வியாக்கியானம் எழுதியிருக்கிறார்.அந்த வியாக்கியானம் ஆரம்பத்தில் ஸ்ரீமான் காந்தி"மேலே காட்டிய தொகையைப் படிப்போர் அழுவார்கள் என்பது திண்ணம்"என்கிறார்.அப்பால், இந்த நிலைமையை நீக்கும் பொருட்டு, தமக்குப் புலப்படும் உபாயங்களில் சிலவற்றை எடுத்துச் சொல்லுகிறார். அவற்றின் சுருக்கம் யாதெனில்
(1) பால்ய விவாகத்தை நிறுத்திவிட வேண்டுமென்பதும்
(2) 15 வயதுக்குட்பட்ட கைம்பெண்களும் மற்ற இளமையுடைய கைம்பெண்களும் புனை விவாகம் செய்து கொள்ள இடம் கொடுக்க வேண்டுமென்பதுமேயாகும்.

(நன்றி...மகாகவி பாரதியார் கட்டுரைகள், பூம்புகார் பிரசுரம்,செப்டம்பர் 1977.)



அன்புடன்...
சரவணன்.

1 பிட்னூட்டங்கள்:

said...

இந்திய சமுதாயத்தில் பெண்கள் தங்களுக்கு உள்ள உரிமைகளை உணராத வரையில் மற்ற ஆண்கள் அவர்களை அடக்கியே வாழ்வார்கள். முதலில் நாம் செய்ய வேண்டியது சமுதாயத்தில் அவர்களது முக்கியத்துவத்தையும், பங்கீட்டனையும் அறிந்துகொள்ள செய்யவேண்டியது. அறியாமையினால்தான் இப்படி அலைகழிக்கப்டுகிறார்கள். சமுதாயத்திற்கு ஆணும் தேவை, அதேபோல் பெண்ணும் அனைத்து துறைகளிலும் தேவை என்பதை முக்கியமாக அவர்கள் அறியவேண்டும்.
பெண்களுக்கும் உணர்ச்சிகள் உண்டு என்பதையும் ஆண்கள் புரிந்துகொள்ளவேண்டும். மாறிவரும் இக்கால இளைஞர்கள் நாளைய வாலிபர்கள் மனது இப்போது இருப்பதை போலில்லாமல் திறந்த மனதுடன் விதைகளை அனுகுவார்கள் என நம்புவோம்.