கலித்தொகை 2. கபிலர் (குறிஞ்சி).
கபிலர்
சங்க இலக்கியப் படல்களுள் மிக அதிகமான எண்ணிகையுள்ள பாடல்களைப் பாடிய கபிலர் கலித்தொகையில் குறிஞ்சிக் கலியினைப் பாடியுள்ளார்.இவர் அகத்திணைகள் பலவற்றைப் பாடும் திறமுடையவராயினும் கலித்தொகையில் குறிஞ்சித்திணை பற்றிப் பாடியது மட்டுமன்றிப் பத்துப் பாட்டில் குறிஞ்சிப் பாட்டையும், ஐங்குறு நூற்றில் குறிஞ்சித் திணை பற்றியே நூறு பாடல்களையும் பாடியதோடு, இத்திணைபற்றி அகநானூறு, குறுந்தொகை, நற்றிணை ஆகிய நூல்களிலும் மிகுதியான பாடல்களைப் பாடியுள்ளார். எனவே குறிஞ்சி பாடிய கபிலர் என்றே இவரைக் கூறாலாம்.
இவர் கடையேழு வள்ளல்களுள் ஒருவனாகிய வேள்பாரியின் உற்ற நண்பராக விளங்கினார்.அவன்பால் மட்டுமின்றி அவனது புறம்புமலையினிடத்தும் மிக்க ஈடுபாடு கொண்டிருந்தார். இவரது வாழ்க்கை பாரிவேளின் நட்பில் பெரிதும் பிணைந்திருந்தது. அவனது இறப்புக்காக பெரிதும் வருதமுற்றதோடு அவனுடைய மகளிரைத் தக்க சான்றோரிடம் அடைக்கலப்படுத்தினார் என்பர். இவர் பாண்டிய நாட்டில் திருவாதவூரில் பிறந்தார் என்று திருவாலவாயுடையார் திருவிளையாடற்ப் புராணம் கூறும்.இவரைப் "புலனகற்ற அந்தணாளன்"என மாறோக்கத்து நப்பசலையார் பாராட்டிக் கூறுகின்றார்.
இவர் இயற்றிய பாடல்களுல் மிகச் சிறந்து விளங்குவது பத்துப் பாட்டிலுள்ள குறிஞ்சிப் பாட்டு ஆகும். "ஆரிய அரசன் பிரகத்தன்" என்பவனைத் தமிழ் அறிவித்தற்க்கு இப்பாட்டினைப் பாடினார். இதில் குறிஞ்சி நிலத்தின் பலவகைப் பூக்களையும்,சிறப்பாக பன்னிரண்டு ஆண்டுக்கொரு முறை பூக்கும் குறிஞ்சிப் பூவையும் குறிப்பிட்டுப் பாடியுள்ளார். அகப்பொருள் திணைகளுள் தமது மனம் கவர்ந்த குறிஞ்சித் திணையின் துறைகளுள் சிறந்ததாகிய அறத்தொடு நிற்றல் என்னும் துறை பற்றித் தோழியின் கூற்றாக இப்பாட்டினை அமைத்துள்ளார். இதில் வரும்,
"முத்தினும் மணியினும் பொன்னினும் அத்துணை
நேர்வரும் குரைய கலம்கெடின் புணரும்;
சால்பும் வியப்பும் இயல்பும் குன்றின்
மாசறக் கழீஇ வயங்குபுகழ் நிறுத்தல்
ஆசறு காட்சி ஐயர்க்கும் அந்நிலை
எளிய என்னார் தொல்மருங்கு அறிஞர்"
என்னும் அடிகள் ஒழுக்கத்தின் விழுப்பத்தி3னை எடுத்துக்காட்டுவனவாகும்.
இவைபோல் குறிஞ்சிக் கலியிலும் இவர் மாந்தரின் உயர் பண்புகள் பலவற்றை வற்புறுத்துவதோடு பெண்டிரின் கற்புத் திறத்தையும் அதன் வலிமையால் அவர் தம் கணவன்மார்க்கு ஆற்றல் பெருகுவதையும் தோழியின் கூற்றாக வரும் ஒரு பாடலில் தெரிவிக்கின்றார்.
"காந்தல் கடிகமழும் கண்வாங்கு இருஞ்சிலம்பின்
வாங்கமை மென்றோள் குறவர் மடமகளிர்
தாம்பிழையார் கேள்வர்த் தொழுதுஎழலால்,தம் ஐயரும்
தாம்பிழையார் தாம்தொடுத்த கோல்"
என்பவை அவ்வடிகளாகும்.
பாரிவேள் மறைந்த பின்னர் இவர் பதிற்றுப்பத்தில் ஏழாம் பத்தினைப் பாடிச் சேரமான் செல்வங்கடுன்கோ வாழியாதனிடம் நூறாயிரம் காணமும் அவன் நன்றா என்னும் மலை மீது ஏறி தனது கண்பட்ட அளவும் கொடுத்த நாடும் பரிசிலாகப் பெற்றார்.சங்ககாலப் புலவர்கள் பலரும் இவரைப் புகழ்ந்து கூறியுள்ளனர்.
பதினோராம் திருமுறையில் சில நூல்களைப் பாடிய கபில தேவநாயனார் என்பவர் பிற்காலத்தைச் சேர்ந்த வேறொரு புலவர் பெருமகனார் ஆவார்.
அடுத்து : 3.மருதனிளநாகனார்.
அன்புடன்...
சரவணன்.
9 பிட்னூட்டங்கள்:
சோதனைப்பின்னூட்டம்
நல்ல முயற்சி. தொடர்ந்து எழுதுங்கள் சரவணன்.
படிப்பதற்காகப் பிரதி எடுத்திருக்கிறேன். படித்தப் பின் கருத்துகளைச் சொல்கிறேன்.
வள்ளல் பாரியின் மக்கள் அங்கவை சங்கவையின் வாழ்க்கைதான் கொடுமையானது அவர்களை மணக்க போட்டி போட்ட மன்னர்கள் பிறகு அம்போன என விட்டு விட்டு சாப்பாட்டிற்கே அல்லல் பட வைத்துவிட்டார்கள்
குமரன் (Kumaran) said…
//நல்ல முயற்சி. தொடர்ந்து எழுதுங்கள் சரவணன். //
என் முயற்சியை ஊக்கப் படுத்தியமைக்கு நன்றி!
நிச்சயம் தொடர்ந்து எழுதுவேன்.
//படிப்பதற்காகப் பிரதி எடுத்திருக்கிறேன். படித்தப் பின் கருத்துகளைச் சொல்கிறேன்.//
உங்களின் கருத்துக்களுக்காக காத்திருக்கின்றேன்!
அன்புடன்...
சரவணன்.
கபிலரைப் பற்றி நிறைய இடங்களில் படித்திருக்கிறேன். ஆனால் அவர் குறிஞ்சித் திணையில் மிகுதியாகப் பாடல்கள் இயற்றியிருக்கிறார் என்பது தெரியாது. நல்ல செய்தி.
கடையேழு வள்ளல்களைக் கடையேழு வள்ளல்கள் என்று ஏன் கூறுகிறார்கள் தெரியுமா? அவர்களுக்கு முன்னர் இருந்த வள்ளல்கள் யாவர்?
புலனகற்ற அந்தணாளன் என்ற இந்தக் குறிப்பைக் கொண்டு தான் இவர் ஒரு பிராமணர் என்று சொல்கிறார்களா? இல்லை இன்னும் வேறு குறிப்புகள் ஏதேனும் இருக்கின்றனவா?
குறிஞ்சிப் பாட்டில் பலவகைப் பூக்களைப் பற்றிப் பாடியுள்ளதை இன்னொரு பதிவில் படித்ததாக நினைவு.
இங்கேயும் பாடல்களுக்கு உரை இருந்திருந்தால் இன்னும் நன்றாகச் சுவைத்திருக்கலாம் என்று தோன்றுகிறது.
சேரமானிடம் மிகப் பெரிய பரிசு தான் பெற்றிருக்கிறார். :-)
கபிலர் பற்றி நான் பதிவிட்டிருக்கும் அதே வேளையில் திரு.டோண்டுராகவன் அவர்களின் பதிவிற்க்கு பின்னூட்டமிட்டிருந்த திரு.ம்யூஸ்(ரவியின் கருத்தாக) மற்றும் வெட்டிப்பயலின் பின்னூட்டமும் கபிலரைப் பற்றி இருந்தமையால் அவைகளையும் இங்கே இணைக்கின்றேன்!
# எழுதியவர்: Muse (# 5279076)
//செந்தழல் ரவி தன்னுடைய ஊரின் பெருமைகளைக்கூற ஆரம்பித்தார். சுவையாகவே கதை சொல்லுகிறார். வாமன ரூபமுள்ள விஷ்ணு படுத்திருக்கும்கோலம் அவ்வூரில்தான் உள்ளது என்ற ஆச்சரிய தகவலை சொன்னதால் இனி அவரை ஆச்சார்ய செந்தழல் ரவி என்று யாராவது சொல்லப்போகிறார்கள். பாரியின் பெண்களான அங்கவை, சங்கவையை திருமணம் செய்துகொடுத்த
பின்னால் பாரியின் நண்பரான கவிஞர் கபிலர் பாரியின் மரணத்திற்குத் தானேகாரணம் என்கிற குற்ற உணர்வால் வடக்கிருந்து உயிர்நீத்ததும் அவருடைய ஊர்தான் என்று கூறினார்.//
# எழுதியவர்: வெட்டிப்பயல்
//வாமன ரூபமுள்ள விஷ்ணு அல்ல...
திருவரங்கநாதனைவிட பெரிய உருவமுள்ள ஆதிதிருவரங்கத்தைப் பற்றி சொல்லியிருப்பார் என்று நினைக்கிறேன். இல்லை உலகலந்த பெருமாள் கோவிலை பற்றியும் சொல்லியிருக்கலாம்.
மேலும் அந்த ஊர்தான் பொன்னியின் செல்வனில் வரும் மலையமான் (கரிகாலனின் தாத்தா) ஆண்ட ஊர்.
மேலும் மூன்று ஆழ்வார்கள் சந்தித்த ஊரும் அதுவே. அவர்களுக்கு ஸ்ரீமன் நாராயணன் காட்சி அளித்த ஊரும் அதுவே.
சிவனடியார் வேடம் பூண்டு வந்து தன்னை கொன்றவனையும் "அடியார் வேடமிட்டு வந்திருப்பதால் இவர் நம்மவர். இவருக்கு எந்த தீங்கும் வராமல் ஊர் எல்லை வரை கொண்டு விட்டுவாருங்கள்" என்று சொன்ன சைவ மன்னர் "மெய்ப்பொருள் நாயனார்" ஆண்ட ஊரும் அதுவே.
அந்த ஊரின் பெயர் திருக்கோவிலூர், தென்னாற்காடு மாவட்டம் (தற்போது விழுப்புரம் என்று நினைக்கிறேன்)
அங்கே இருக்கும் ஒரு பாறையில் (பஞ்சனாம் பாறை) இருந்து பார்த்தால் திருவண்ணாமலையில் ஏற்றும் தீபம் தெரியும்.//
நன்றி: டோண்டுராகவன்,ம்யூஸ்,செந்தழல் ரவி மற்றும் வெட்டிப்பயல்.
அன்புடன்...
சரவணன்.
சரவணன்,
நல்ல பதிவு. தொடருங்கள்..
நன்றி.
ENNAR said…
//வள்ளல் பாரியின் மக்கள் அங்கவை சங்கவையின் வாழ்க்கைதான் கொடுமையானது அவர்களை மணக்க போட்டி போட்ட மன்னர்கள் பிறகு அம்போன என விட்டு விட்டு சாப்பாட்டிற்கே அல்லல் பட வைத்துவிட்டார்கள்//
கடையேழு வள்ளல்களுல் ஒருவனான பாரியின் பெண்கள் சாப்பாட்டிற்க்கே அல்லல்ப் பட்டனர், என்ற செய்தி மிகவும் வருதப்படக்கூடியது.
கருத்தப் பகிர்ந்து கொண்ட இந்தவார "நட்சத்திரம்" என்னார் அவர்களுக்கு நன்றி!
அன்புடன்...
சரவணன்.
தொடரும் படி உற்சாகமூட்டிய அன்புநண்பர் திரு.சிவபாலன் அவர்களுக்கு நன்றி!
குமரன் (Kumaran) said...
//கடையேழு வள்ளல்களைக் கடையேழு வள்ளல்கள் என்று ஏன் கூறுகிறார்கள் தெரியுமா? அவர்களுக்கு முன்னர் இருந்த வள்ளல்கள் யாவர்?//
புலனகற்ற அந்தணாளன் என்ற இந்தக் குறிப்பைக் கொண்டு தான் இவர் ஒரு பிராமணர் என்று சொல்கிறார்களா? இல்லை இன்னும் வேறு குறிப்புகள் ஏதேனும் இருக்கின்றனவா? //
மன்னிக்கவும் குமரன்! தங்களின் கேள்விக்குப் பதில் தெரியவில்லை, தெரிந்த நண்பர்கள் பின்னூட்டமிடவும்!
//இங்கேயும் பாடல்களுக்கு உரை இருந்திருந்தால் இன்னும் நன்றாகச் சுவைத்திருக்கலாம் என்று தோன்றுகிறது. //
இங்கு நான் இரண்டு பாடல்களை குறிப்பிட்டுள்ளேன், அதன் முதல் பாடல் பத்துப் பாட்டிலுள்ள குறிஞ்சிப் பாட்டு ஆகும், என்னிடன் இதற்க்கு விளக்க உரை இல்லை, எனவே இரண்டாம் பாடலும் அதற்கான(குறிஞ்சி கலி) விளக்க உரையும்:
"காந்தல் கடிகமழும் கண்வாங்கு இருஞ்சிலம்பின்
வாங்கமை மென்றோள் குறவர் மடமகளிர்
தாம்பிழையார் கேள்வர்த் தொழுதுஎழலால்,தம் ஐயரும்
தாம்பிழையார் தாம்தொடுத்த கோல்"
தெளிவுரை:
"காந்தள் மலர் மணம் வீசும் அக்கண்கவர் மலையில், மூங்கில் போன்ற தோள்களை உடைய குறவர் மகளிர், நாளும் தவறாமல் தம் கணவரைத் தொழுது எழுவதால், அந்த ஆடவர்கள் அம்புக்கு வைத்தக் குறி தப்புவதில்லை(மகளிரின் கற்பிற்கு இப்பொழுது தடை வந்துள்ளமையால்) விளையும் பொய்க்கும். ஆடவர் வேட்டைக்குச் சென்றால்,அம்பு குறி தவறும்".
சேரமானிடம் மிகப் பெரிய பரிசு தான் பெற்றிருக்கிறார். :-)
நிச்சயமாக!
ஒரு மலையின் மீது ஏறி கண்ணுக்குத் தென்படும் அளவுள்ள நிலப்பரப்பை பரிசாகப் பெருவது பெரிய விசயம் தானே! அதைவிட அப்பரிசினை அளித்த சேரமான் செல்வங்கடுன்கோ வாழியான் சிறப்புடையவனாகின்றான்.
அன்புடன்...
சரவணன்.
Post a Comment