கலித்தொகை - 4. சோழன் நல்லுருத்திரன்(முல்லை)

1.பாலை பாடிய பெருங்கடுங்கோ (பாலை).
2. கபிலர் (குறிஞ்சி)
3. மருதனிளிநாகனார்(மருதம்


4. சோழன் நல்லுருத்திரன் (முல்லை).

இவர் முல்லைக் கலியினைப் பாடியுள்ளார். இதைத்தவிரப் புறநாறுற்றில் பொருள்மொழிக் காஞ்சித்துறை பற்றி ஒரு பாடலைப் பாடியுள்ளார். அதில் சிறு அளவினதாகிய கதிர்களை வயலில் தன் பல்லினால் கடித்தெடுத்து வளையில் சேர்க்கும் எலியைப் போல் அற்பமுயற்சி செய்யும் ஆடவரைப் போல அல்லாமல், உரிய இரை கிடைக்கவில்லை எனில் பசித்துக்கிடந்து காட்டுப் பன்றி எதிர்ப்படும் போது அதனை அடித்துக் கொன்று உண்ணும் புலியைப் போலப் பெருமுயற்சி செய்யும் ஆடவரின் ஊக்கத்தைப் பாராட்டுகின்றார்.

இப்புலவர் சோழமன்னர் குடியினைச் சார்ந்தவர் என்பது இவரது பெயருக்குரிய அடைமொழியால் புலப்படுகின்றது. இவர் காலத்தில் சோழநாடு பாண்டிய மன்னரின் ஆட்சி எல்லைக்குள் அடங்கிய சிற்றரசாக இருந்தது போலும். அதனால்தான் மருதக்கலியின் பாடல்கலில் பாண்டியனின் மேலாண்மையைச் சிறப்பித்துப் பாடுகின்றார். அவற்றுள் சிறந்த பா

டலாக அறிஞர்கள் எடுத்துக் காட்டும் "மலிதிரை ஊர்ந்து" எனத் தொடங்கும்
கலிப்பாவில்,

"மலிதிரை ஊர்ந்துதன் மண்கடல் வெளவலின்
மெலிவின்றி மேற்சென்று மேவார்நாடு இடம்படப்
புலியொடு வில்நீக்கிப் புகழ்பொறித்த கிளர்கெண்டை
வலியினான் வணக்கிய வாடாச்சீர்த் தென்னவன்"

என்று பாண்டிய மன்னனின் மேலாண்மையைப் புலப்படுத்துகின்றார். மற்றொரு பாடலில் பாண்டியனை "எம்கோ வாழியார்" என் வாழ்த்துகின்றார். ஏறுதழுவி வென்ற ஆடவரைக் காதலித்து மணந்த செய்தியையும் சிறப்பித்துப் பாடுகின்றார். இவர் முல்லைக் கலியில் முல்லைத்திணை ஒழுக்கமாகிய இருத்தலும், இருத்தல் நிமித்தமும் என்பதைப் பாடுதலை விட முல்லை நிலத்து ஆயர் குடியினரின் வீர விளையாட்டாகிய ஏறுதழுவுதலையும் ஆயர் மகளிர் வீரமில்லாத ஆடவரை இப்பெண்டிர் தம் நெஞ்சில் இருந்தார் என்பதை இவர் எடுத்துக் கூறும்,

"கொல்லேற்றுக் கோடாஞ்சு வானை மறுமையும்
புல்லாளே ஆய மகள்"

என்னும் அடிகள் புலவர் உலகின் சிந்தைக் கவர்ந்தவையாகும்.


அடுத்து....

5. நல்லந்துவனார்


அன்புடன்...
சரவணன்.