கலித்தொகை 3. மருதனிளநாகனார் (மருதம்).

1.பாலை பாடிய பெருங்கடுங்கோ (பாலை)
2. கபிலர் (குறிஞ்சி).


3. மருதனிளநாகனார்.


இவர் மருதக்கலியைப் பாடியுள்ளார். இதைத் தவிர அகநானூற்றில் 22 பாடல்களும், குறுந்தொகையில் 4 பாடல்களும், நற்றிணையில் 12 பாடல்களும், புறநானுற்றில் முறையே பாண்டியன் கூடகாரத்துத்துஞ்சிய மாறன்வழுதி, பாண்டியன் இலவந்திகைபள்ளித்துஞ்சிய நன்மாறன், நாஞ்சில் வள்ளுவன் ஆகியோரைப் பற்றியும், பொதுவாகவும் 4 பாடல்களும் பாடியுள்ளார்.

மருதக்கலியில் மருததிணையின் உரிப்பபொருளாகிய ஊடலும் ஊடல் நிமித்தமும் என்பது பற்றியப் பாட எடுத்துக் கொண்டு மகளிரின் மெல்லிய மனம் ஆடவரின் பரத்தமை ஒழுக்கத்தால் எவ்வாறெல்லாம் வருந்துகிறது என்பதையும் அதனால் அவர்கள் உரிமையோடு தம் கணவரிடம் போராடுவதையும் நயமாக எடுத்துக் கூறியும், இடித்துக் காட்டியும் அவர்களைத் திருத்தும் மாண்பினையும் விரிவாகப் பாடியுள்ளார்.

அத்தகைய மாண்புடைய பெண்டிருள் ஒருத்தி தனது கோபம் தீர்வதற்க்குரிய காரணமாக,

"விருந்து எதிர்கொள்ளவும் பொய்ச்சூள் அஞ்சவும்
அரும்பெறற் புதல்வனை முயங்கக் காணவும்
ஆங்கவிந்து ஒழியும் என் புலவி"

என்று கூறுவது விருந்தெதிர் கோடல், மக்களை வளர்த்தல் முதலிய குடும்பக் கடமைகளை, தனது காதலை விடச் சிறந்தவாகக் கருதும் அவளது குணமான்பினைப் புலப்படுத்துகின்றது.


அடுத்து....

4. சோழன் நல்லுருத்திரன்(முல்லை)

அன்புடன்...
சரவணன்.

2 பிட்னூட்டங்கள்:

said...

சோதனைப் பின்னூட்டம்

said...

இந்த விருந்து எதிர் கொள்ளுதலைத் தான் கண்ணகியும் கோவலன் பிரிந்து மாதவியிடம் சென்ற போது தான் இழந்ததாகக் கூறுகிறாள். இது சங்க கால பெண்டிர்களின் இயற்கைக் குணம் போலும்.