கலித்தொகை -1.பாலை பாடிய பெருங்கடுங்கோ (பாலை).

பண்டைய தமிழ் இலக்கியம் பற்றி சிறிது எழுதலாம் என்ற எண்ணத்தில் நான் படித்துக் கொண்டிருக்கும் கலித்தொகையை எடுத்துள்ளேன்.
"சங்க இலக்கியம்-கலித்தொகை" இந்த உரையின் ஆசிரியர் முனைவர்.சுப.அண்ணாமலை.
நான் படித்தவற்றை அப்படியே உங்களின் பார்வைக்கு வைக்கின்றேன்!
கலித்தொகை மொத்தம் 5 பெரும் புலவர்களால் பாடப்ப்பட்டுள்ளது! அவர்களைப் பற்றிய குறிப்புகள்.

1.பாலைபாடிய பெருங்கடுன்கோ (பாலை).
2.கபிலர் (குறிஞ்சி).
3.மருதனிளநாகனார் (மருதம்).
4.சோழன் நல்லுருத்திரன்(முல்லை).
5.நல்லந்துவனார்.


கலித்தொகை

பாடினோர் வரலாறு

1.பாலை பாடிய பெருங்கடுங்கோ!
கலித்தொகையில் முதற்ப் பகுதியாகிய பாலைக் கலியை பாடிய இவர் சேரவெந்தருள் ஒருவர். இவர் பெயர் "சேரமான் பாலை பாடிய பெருங்கடுங்கோ"எனவும் வழங்கும். அகப்பொருள் திணைகளுள்"பிரிதலும் பிரிதல் நிமித்தமும்"என்னும் உரிப்பொருளை உடைய பாலைத் திணையைப் பாடுதலில் மிக்க ஆற்றல் வாய்ந்தவர் ஆதலின்,"பெருங்கடுங்கோ"என்ற தமது இயற்ப் பெயருக்கு அடைமொழியாகப் "பாலைப் பாடிய" என்னும் சிறப்புத் தொடரைச் சேர்க்கப் பெற்றார்.

பாலைத் திணையில் இவர் பாடிய கலித்தொகைப் பாடல் ஒன்றில் பாலை நிலத்தின் கொடிய வெம்மையை மிக்க பொருத்தமான உவமைகள் வாயிலாக எடுத்துக் காட்டுகின்றார்.

வறியவ னிளமைபோல் வாடிய சினையவாய்ச்
சிறியவன் செல்வன்போற் சேர்ந்தார்க்கு நிழலின்றி
யார்கண்ணு மிகந்துசெய் திசைகெட்டா னிறுதிபோல்
வேரோடு மரம்வெம்ப விரிகதிர் தெறுதலி
னலவுற்றுக் குடிகூவ வாறின்றிப் பொருள் வெஃகிக்
கொலையஞ்சா வினைவராற் கோல்கோடி யவனிழ
லுலகுபோ லுலறிய வுயர்மர வெஞ்சுரம்;

என்ற இவரது வருணனை நிலத்தின் கொடுமையை மட்டுமின்றி வறுமைத் துன்பம், சிறியார் செல்வத்தின் பயனின்மை,அகந்தை கொண்டோரின் அழிவு,கொடுங்கோல் அரசின் கீழ்வாழும் குடிமக்களின் அல்லல் ஆகியவற்றையும் நன்கு எடுத்துக் காட்டுகிறது.
இங்குத் தாம் பாடிய மன்னனைப் போல அன்றி, இவர் கொடைப் பண்பும், வீரமும் உடைய நல்லரசராக விளங்கினார். புறநானுற்றில் இவரைப் பாடிய போய்மகள் இளவேயினி என்னும்சான்றோர் இவர் பாணருக்குப் பொற்றாமரையும், பாடினிக்குப் பொன்னரி மாலையும் பரிசாக வழங்கியமையைப் புகழ்கின்றார்.
இந்நல்லிசைச் சான்றோர் பாலைத் திணையைப் பற்றி மட்டுமே அகநானுற்றில் 12 பாடல்களும் குறுந்தொகையில் 10 பாடல்களும் நற்றிணையில் 10 பாடல்களும் பாடியுள்ளார்.புறநானுற்றில் இவர் பாடியதாக அடிகள் சிதைந்துள்ள பாடல் ஒன்று கிடைத்துள்ளது.


அடுத்து: 2.கபிலர்.

அன்புடன்...
சரவணன்.

10 பிட்னூட்டங்கள்:

said...

சோதனைப் பின்னூட்டம்

said...

என்ன கொடுமைங்க சரவணன்!(நானே என்னை நொந்துகொண்டது).:(((((

ஒரு புதிய இலக்கியப் பதிவு தொடங்கி நானும் ஒரு 3 பதிவும் போட்டாச்சு ஆனா இந்த தொடரின் முதல் பதிவிற்க்கு ஒரு பின்னூட்டம் கூட வரவில்லை?
இதற்க்கு என்ன காரணமாக இருக்கலாம்?
1.எந்த ஒரு பதிவருக்கும் இந்தத் "தமிழ்" பதிவு(கலித்தொகை) பிடிக்கவில்லையா?

2.இல்லை உங்களின் எழுத்து ஆர்வத்திற்க்கு இதுபோன்ற இலக்கியங்களுக்குத் தகுதியில்லையா?

3.இல்லை பின்னூட்டினால் எங்கே நம்மையும் "தமிழ் விரும்பி" என்று முத்திரை குத்தி ஒரு வட்டத்திற்க்குள் வைத்திருவிடுவார்கள் என்ற எண்ணமா?

4.இல்லை உங்களால் படிக்கப்பட வில்லையா?

5.அல்லது படித்தும் பின்னூட்டமிட நேரமின்மையா?
(ஆனால் எனது இந்தப் பின்னூட்டம் -இந்தப் பதிவு மறு மொழியப்பட்ட வையின் கீழ் வந்து புதிய சிலராவது படிப்பார்கள் என்ற எண்ணத்தில்)

பின்னூட்ட விளம்பரத்திற்க்காக நான் இதை சொல்லவில்லை.ஒரு சிறு உற்சாகம் தந்தால் நானும் மனமுவந்து நமது எழுத்தை சிலர் படிக்கின்றனர். கஷ்டப்பட்டு டைப்பியது வீண் போகவில்லை என்று நானும் உற்சாகத்துடன் தொடருவேன் அல்லவா?

எது எப்படியோ தொடர்ந்து இதுபோன்ற அடுத்தவர்களின் சிறந்த சில இலக்கியப் படைப்புக்களை எழுதலாம் என்றுள்ளேன்!

அன்புடன்...
சரவணன்.

said...

சரவணன். உங்கள் பதிவை நேற்றே பார்த்தேன். அப்போது நேரமின்மையால் படிக்க முடியவில்லை. இன்று காலையிலும் பார்த்தேன். படிக்கப் பிரதி எடுத்துக் கொண்டேன். நீங்கள் இப்படி மனம் நோக வாய்ப்பிருக்கிறது என்று எண்ணியதால் தான் உங்களின் இரண்டாவது கலித்தொகைப் பதிவில் வந்து 'ஐயா. படிக்கிறேன். படிச்சபிறகு சொல்றேன்'ன்னு பின்னூட்டம் இட்டேன்.

தயங்காம தொடருங்க சரவணன். மெதுவாக மக்கள் கூட்டம் எட்டிப் பார்க்கும். சில நேரம் பத்துப் பதிவுகளாவது ஆகலாம். :-)

said...

சரவனன்,

சங்க இலக்கியம் படிக்க வேண்டும் என்ற ஆவல் அண்மைக்காலமாக எனக்கும் வந்திருக்கிறது. ஆனால் தற்போது அமெரிக்காவில் இருப்பதால் உடனே எந்த உரை நூலும் வாங்கிப் படிக்க முடியவில்லை. உரையில்லாமல் சங்க இலக்கியங்களைப் படித்துப் புரிந்து கொள்ள இயலவில்லை. அடுத்தமுறை தமிழகம் வரும் போது சங்க இலக்கிய நூல்களை உரையுடன் வாங்கிப் படிக்க வேன்டும் என்று எண்ணியிருந்தேன். அந்த நேறத்தில் உங்கள் பதிவினைக் கண்டதும் மிக மகிழ்ந்தேன். ஆனால் நீங்கள் விளக்க உரை இல்லாமல் பதிவுகளை எழுதியிருப்பதைக் கண்டு சற்று ஏமாந்தேன். ஒவ்வொரு பாட்டிற்கும் சொல் சொல்லாக இல்லை அடி அடியாகப் பொருள் சொன்னால் மிக மகிழ்வேன். அதுவே என் வேண்டுகோள்.

இந்த நூலை ஏன் கலித்தொகை என்கிறார்கள் என்பதற்கு ஏதாவது குறிப்பு இருக்கிறதா? தொகை என்றால் தொகுத்தது – கலித்தொகை என்றால் கலிகளைத் தொகுத்தது என்ற பொருள் தோன்றுகிறது. ஆனால் ஏன் இந்தப் பாடல்களைக் கலி என்றார்கள் என்று ஏதேனும் சொல்லியிருக்கிறார்களா? இந்தக் கலிக்கும் கலியுகத்தில் இருக்கும் கலிக்கும் ஏதாவது தொடர்புண்டா?

பெருங்கடுன்கோவைத் தவிர மற்ற புலவர்களின் பெயர்கள் கேல்விப்பட்டதாக இருக்கிறது. கபிலரின் பெயர் பல இடங்களில் பார்த்திருக்கிறேன். மற்றவர் பெயரும் கேள்விப் பட்டிருக்கிறேன்.

பாடினோர் வரலாறு என்று தொடங்கியிருக்கிறீர்கள். இது முன்னுரை மட்டும் தானா? பாடல்களைப் பார்க்கும் போது உரையுடன் சொல்வீர்களா?

பாலை நிலத்தின் வருணனையை கொஞ்சம் நிறுத்தி நிதானமாகப் படித்தால் புரிந்தது போல் இருக்கிறது. ஆனால் உரையுடன் இருந்தால் இன்னும் நன்றாகப் புரியும் என்று தோன்றுகிறது.

பாணருக்குப் பொற்றாமரை, பாடினிக்குப் பொன்னரி மாலை – ம்ம்ம். வள்ளல் தான். பொன்னரி மாலை என்றால் என்ன?

said...

குமரன் (Kumaran) said...
// நீங்கள் இப்படி மனம் நோக வாய்ப்பிருக்கிறது என்று எண்ணியதால் தான் உங்களின் இரண்டாவது கலித்தொகைப் பதிவில் வந்து 'ஐயா. படிக்கிறேன். படிச்சபிறகு சொல்றேன்'ன்னு பின்னூட்டம் இட்டேன். //

என் மனம் நோகக்கூடாது என்ற எண்ணத்தில் பதிவிட்ட அன்பு நண்பர் திரு.குமரன் அவர்களுக்கு நன்றி!


//தயங்காம தொடருங்க சரவணன். மெதுவாக மக்கள் கூட்டம் எட்டிப் பார்க்கும். சில நேரம் பத்துப் பதிவுகளாவது ஆகலாம். :-) //

நிச்சயம் நண்பரே! உங்களைப் போன்றவர்களின் உற்சாகத்திற்க்கு நன்றி!

அன்புடன்...
சரவணன்.

said...

குமரன் (Kumaran) said…

//தற்போது அமெரிக்காவில் இருப்பதால் உடனே எந்த உரை நூலும் வாங்கிப் படிக்க முடியவில்லை. உரையில்லாமல் சங்க இலக்கியங்களைப் படித்துப் புரிந்து கொள்ள இயலவில்லை. அடுத்தமுறை தமிழகம் வரும் போது சங்க இலக்கிய நூல்களை உரையுடன் வாங்கிப் படிக்க வேன்டும் என்று எண்ணியிருந்தேன்.//

நான் படித்துக் கொண்டிருப்பது..
சங்க இலக்கியம்- கலித்தொகை
உரையாசிரியர்:சுப.அண்ணாமலை
வெளியீடு: கோவிலூர் மடாலயம்
விலை : ரூ.275.00

இந்த நூல் எளிய நடையில் உரைகளைக் கொண்டுள்ளது.
கருத்து,தெளிவுரை,அருஞ்சொற்பொருள் மற்றும் சிறப்புக் குறிப்புகள் என ஒவ்வொரு பாடலுக்கும் பல பகுதிகள் உண்டு.

//இந்த நூலை ஏன் கலித்தொகை என்கிறார்கள் என்பதற்கு ஏதாவது குறிப்பு இருக்கிறதா? தொகை என்றால் தொகுத்தது – கலித்தொகை என்றால் கலிகளைத் தொகுத்தது என்ற பொருள் தோன்றுகிறது. ஆனால் ஏன் இந்தப் பாடல்களைக் கலி என்றார்கள் என்று ஏதேனும் சொல்லியிருக்கிறார்களா? இந்தக் கலிக்கும் கலியுகத்தில் இருக்கும் கலிக்கும் ஏதாவது தொடர்புண்டா? //

அகப்பொருள் ஐந்திணை பற்றி அந்நூல்களில் பெருகப் பாடிய நல்லிசைப் புலவர்களே கலிப்பா வகையில் அகப்பொருள் பாடும் பழைய மரபை நினைவு கூர்ந்து,அதற்குரிய சிறப்பளித்ததற்க்காக, அவ்வகையிலும் திணைப் பாடல்களைப் பாடினர். அவையே ஆசிரியர் நல்லந்துவனாரால் "கலித்தொகை" என்னும் நூலாகத் தொகுக்கப்பெற்றன.இதொகை நூலுக்கும், "பரிபாடல்" என்ற தொகை நூலுக்கும் மட்டும் யாப்பு வகையால் பெயர் அமைக்கப் பெற்றமை இச்சிந்தனைகளைத் தொற்றுவிக்கின்றது.
கலிப்பா என்னும் யாப்புப் பல உறுப்புக்களைக் உட்கொண்டது. அதனுடைய அமைப்பு ஒரு கட்டுரை போல, முன்னிரை, கருத்துக்கள்,முடிவுரை என்பனவற்றுடன் விளங்கும்.

//பாடினோர் வரலாறு என்று தொடங்கியிருக்கிறீர்கள். இது முன்னுரை மட்டும் தானா? பாடல்களைப் பார்க்கும் போது உரையுடன் சொல்வீர்களா? //

என்னால் முழு கலித்தொகையஒயும் எழுத இயலாது என்று தான் நினைக்கின்றேன்(கால அவகாசமின்மை).எனவே ஏதோ என்னாலான ஆசிரிர் குறிப்பு மட்டுமே.ஆனால் தொடர்ந்து தமிழ் இலக்கியம் எழுத ஆசை

//பாலை நிலத்தின் வருணனையை கொஞ்சம் நிறுத்தி நிதானமாகப் படித்தால் புரிந்தது போல் இருக்கிறது. ஆனால் உரையுடன் இருந்தால் இன்னும் நன்றாகப் புரியும் என்று தோன்றுகிறது. //

நிச்சயம் புரியும்! நான் சொல்லியுள்ள புத்தகத்தை வாங்கிப் படித்து பயனடையவும்.

//பொன்னரி மாலை என்றால் என்ன//

மாலை என்று குறிப்பிட்டமையால் அது கழுத்தில் சூடக்கூடிய அளவுள்ள ஒரு அணிகலன் என்றே தோன்றின்றது, அதுவும் "பொன்னரிமாலை" என்று குறிப்பிட்டமையால் அது தங்கக் காசுகளால் ஆனா மலை என்றே என் சிற்றறிவுக்குத் தோன்றுகின்றது!
பதில் தெரிந்த அல்லது இதைப் பற்றிய குறிப்புகள் தெரிந்த நண்பர்கள் விளக்கவும்!


தங்களின் மேலான கருத்துக்களூக்கு நன்றி திரு.குமரன் அவர்களே!

அன்புடன்...
சரவணன்.

said...

தமிழ், தமிழ் என்று ஒயாமல் சாற்றினாலும், சாடுதற்கு மட்டுமே அதனை பயன்படுத்தி வருபவர்களே நம் வலைபூக்களில் அதிகம்.
நல்லதமிழ் கேட்க ஆளில்லை இங்கு என்ற உண்மையை முதலில் மனதில் சரியாக வாங்கிக் கொண்டு, உங்கள் முயற்சியைத் தொடருங்கல், சரவணன்.

நான் நிச்சயம் படிப்பேன்.
ஊருக்குக் கிளம்பும் மும்முரத்தில் இருப்பதால் [ஒரு வாரம் விடுமுறை!] உடனே மறுமொழியிட இயலவில்லை. வருந்த வேண்டாம்.

கலி பாடினால் கலி தீரும்; களி பிறக்கும் என்பார்கள்.

வாழ்த்துகள்

said...

இன்னொன்று!

தலைப்பில்,

"நான் படித்த, எனக்குப் பிடித்த படைப்புகள் உங்கள் பார்வைக்கு"

என்றிருப்பதால், பார்த்து விட்டு மட்டும் சென்றிருக்கக் கூடும்!
:))
????

said...

மேலுமொன்று!
நேற்று நான் போட்ட திருப்புகழுக்கு இதுவரை இரண்டு பின்னூட்டங்களே!

உங்கள் ஆறுதலுக்காகச் சொன்னேன்!

said...

குமரன்,
கந்தர் கலி வெண்பா கேள்விப் பட்டதில்லை?

கலிப்பா, கலி வெண்பா, கலித்தொகை என்று பல வகையில் கலி எழுதலாம்.